ஆலையடிவேம்பு பிரதேச புளியம்பத்தை கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்க இருக்கும் கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலயம் பாடசாலைக்கான பிரதேச சபை தவிசாளர் கிறோஜாதரன் அவர்களின் உதவி….

ஆலையடிவேம்பு பிரதேச சின்னப்பனங்காடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட புளியம்பத்தைக் கிராமத்தில் கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலயம் எனும் பெயரில் புதிய ஆரம்பக் கல்வி பாடசாலை ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.
இப் பாடசாலையானது புளியம்பத்தை கிராம மற்றும் அதனை அண்டிய மகாசக்தி கிராம, கவடாப்பிட்டி கிராம ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு ஓர் சிறந்த வரப்பிரசாதமாக அமைய இருக்கின்றது.
கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலயம் என பெயர் இடப்பட்ட திருக்கோவில் வலயக்கல்வி பிரிவில் புதிய ஆரம்பக் கல்வி பாடசாலையாக எதிர்வரும் (04/05/2022) ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருக்கின்றது.
புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த பாடசாலைக்கு புளியம்பத்தை கிராமத்தில் இடம் தெரிவு செய்யப்பட்டு ஒரு பாடசாலைக்கான சூழலாக மற்றும் ஆரம்ப வேலைகள் இடம்பெற்று வருவதுடன் இதற்காக அடிப்படை வசதிகளை மேன்படுத்துவது உள்ளடங்கலாக பல வேலைத்திட்டங்கள் மேற்கொள்ள வேண்டியதாகவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிறோஜாதரன் அவர்களிடம் பாடசாலை நிர்வாகத்தினால் நீர்த்தாங்கி ஒன்றின் தேவைப்பாடு குறித்த வேண்டுகோளுக்கிணங்க பிரதேச சபை தவிசாளர் த.கிறோஜாதரன் அவர்களினால் நீர்த்தாங்கி ஒன்று புதிதாக ஆரம்பிக்க இருக்கும் பாடசாலைக்கு வழங்கிவைக்கப்பட்டது.
வேண்டுகோளினையேற்று நீர்தாங்கியினை பெற்றுத்தந்த தவிசாளர் அவர்களுக்கு பாடசாலை நிர்வாகத்தினர் தங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.
இவ்வாறான அபிவிருத்தி செயற்பாட்டிற்கு பங்களிப்பு வழங்குபவர்கள் மற்றும் இது தொடர்வன மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள அ.நல்லதம்பி (அதிபர்: கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலயம் ) – 0779288701 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை மேற்கொள்ளமுடியும்.