ஆலையடிவேம்பு பிரதேச பல ஆலயங்களில் சூர சம்ஹாரம் நிகழ்வுகளில் இன்று ….(நிகழ்வுகளில் தொகுப்புக்கள்)

முருகப் பெருமானை நோக்கி அனுஷ்டிக்கப்படுகின்ற விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும்.
இந்த விரதத்தின் இறுதி நாளான இன்று சூரபத்மன் முருகப்பெருமானுடன் போர் புரிந்து இறுதியில் சேவலும் மயிலுமாக மாறிய வரலாற்றினை கொண்ட கந்தசஷ்டி விரத்தின் மகிமையினை இன்று அனைத்து முருகன் ஆலயங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த விரதம் ஆனது பக்தர்கள் ஆறு நாட்கள் உணவின்றியும் ஒருவேளை உணவருந்தியும் முருகனை நினைத்து விரதமிருப்பார்கள்.
அந்த வகையில் இன்றைய தினம் (10) ஆலையடிவேம்பு பிரதேச பல ஆலயங்களில் ஆலையடிவேம்பு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் ஆலயம், ஆலையடிவேம்பு பிரதேச கோளாவில் விநாயகர் ஆலயம் மற்றும் அக்கரைப்பற்று கருங்கொடித்தீவு பெரிய பிள்ளையார் ஆலயம் போன்ற ஆலயங்களில் மாலை வேளையில் சூர சம்ஹாரம் (சூரன்போர்) நிகழ்வுகள் நடைபெற்றது.
இதன்போது முருகனுடன் சூரன் போர் புரிவதற்காக எவ்வாறான அவதாரங்களை எடுத்தார் என்ற கதையினை எடுத்தியம்பக்கூடியதாக இன்று ஆலய வெளி வீதியில் வெகுசிறப்பாக சூரன்போர் நடைபெற்றது.
இதன் போது பெரும் திரளான பக்கத்தர்கள் கலந்து கொண்டதுடன் குறித்த நிகழ்வுகள் கொரோனா தொற்று தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளுடன் ஒழுங்கு செய்யப்பட்டுயிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.