ஆலையடிவேம்பு பிரதேச திகோ/கோளவில் விநாயகர் மகாவித்தியாலயத்தின் மதில்கள் விழிப்பூட்டல் மிகு அழகிய சுவரோவியங்களால் அழகுபடுத்தல் நடவடிக்கை: விரைவில் அங்குரார்ப்பண நிகழ்வு….

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச திகோ/கோளவில் விநாயகர் மகாவித்தியாலயத்தின் முன் பிரதான வீதியின் மதில்கள் விழிப்பூட்டல் மிகு அழகிய சுவரோவியங்களால் அழகுபடுத்தப்பட்டு வருகின்றது.
சமூக அக்கறைகொண்ட நிதி அனுசரணையாளர்கள் பலரின் பங்களிப்புடனும் பாடசாலை அதிபர் மு.சண்டேஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் ஓவியர்கள் S.மகேசன் மற்றும் T.சந்திரகுமார் அவர்களினால் பாடசாலை மதில்கள் விழிப்பூட்டல் மிகு அழகிய சுவரோவியங்களால் அழகுபடுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சுவரோவியங்கள் வரையும் பணிகள் மிக விரைவில் நிறைவடைந்து விரைவில் சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற உள்ளதுடன். திகோ/கோளவில் விநாயகர் மகாவித்தியாலய பாடசாலை பிரதேசத்தில் காணப்படும் தற்போது கல்வி சார்ந்து மற்றும் பௌதீகவள அபிவிருத்தி சார்ந்து வழந்துவரும் ஒரு பாடசாலையாக காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான உதவிகளை வழங்கி பாடசாலை வளர்ச்சியில் பங்காற்றியமைக்காக பாடசாலை சமூகம் சார்பாக நிதி அனுசரணையாளர்களுக்கு பாடசாலை அதிபர் மு.சண்டேஸ்வரன் அவர்கள் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றார்.