ஆலையடிவேம்பு பிரதேச திகோ/கண்ணகி வித்தியாலயத்தின் முகப்பு பெயருடன் கூடிய பிரதான நுழை வாயில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக இன்று ஆரம்பம்…

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலயத்தின் முகப்பு பெயருடன் கூடிய பிரதான நுழை வாயில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சத்தியம் (வாழும் போதே வழங்கிடுவோம்) அமைப்பின் அனுசரணையில் பாடசாலை அதிபர் த.இராசநாதன் அவர்களின் ஏற்பாட்டில் முகப்பு பெயருடன் கூடிய பிரதான நுழை வாயில் அமைத்து அழகுபடுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலய பாடசாலை பிரதேசத்தில் காணப்படும் அதிகஷ்ட பிரதேச பாடசாலையாக காணப்படுகின்ற போதிலும் தற்போது கல்வி சார்ந்து மற்றும் பௌதீகவள அபிவிருத்தி சார்ந்து வழந்துவரும் ஒரு பாடசாலையாக காணப்படுகின்றது.
கடந்த ஓர் இரு வாரத்திற்கு முன்னாள்பாடசாலையின் மதில்கள் விழிப்பூட்டல் மிகு அழகிய சுவரோவியங்களால் அழகுபடுத்தப்பட்டு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான உதவிகளை வழங்கி பாடசாலை வளர்ச்சியில் பங்காற்றியமைக்காக பாடசாலை சமூகம் சார்பாக “சத்தியம்” வாழும்போதே வழங்கிடுவோம் அமைப்பிற்கு பாடசாலை அதிபர் த.இராசநாதன் மன நிறைவான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றார்.