இலங்கை
பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தை கடந்தன!

இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 8 இலட்சத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் அதிகளவில் அதாவது நேற்று (வெள்ளிக்கிழமை) மாத்திரம் 11 ஆயிரத்து 936 பி.சி.ஆர். பிரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்தவகையில் கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பிரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 8 இலட்சத்து 2 ஆயிரத்து 832 ஆக காணப்படுகின்றது.