இலங்கை
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டு கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று 01.01.2026 காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் குறித்த நிகழ்வானது பிரதேச செயலக வளாகத்தில் இடம் பெற்றது.
நிகழ்வு பிரதேச செயலாளரால் தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு.
பிரதேச செயலாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என அனைவரும் சத்தியபிரமாணம் எடுத்துக் கொண்டனர்.



