ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் சமுர்த்தி அபிமானி வர்த்தகக் கண்காட்சியும் விற்பனை சந்தையும்….

ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில், சமுர்த்தி அபிமானி வர்த்தகக் கண்காட்சியும் விற்பனை சந்தையும் இன்று (09 ) காலை 9.30 மணியளவில் பிரதேச செயலக முன்வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சமுர்த்தி தலைமைப்பீட முகாமைலார் க. நேசராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதேச செயலாளர் இ. திரவியராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதியாக உதவி பிரதேச செயலாளர் ஆர். சுபாகர் கலந்துகொண்டிருந்தார்.
சிறப்பு அதிதிகளாக கணக்காளர் பிரகஸ்பதி, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஹிசைன்டீன், நிர்வாக உத்தியோகத்தர் சோபிதா, கிராம நிருவாக அலுவலகர் பரிமளவாணி சில்வேஸ்டர், கருத்திட்ட முகாமையாளர் கமலப்பிரபா, முகாமைத்துவ பணிப்பாளர் சிவப்பிரியா சுதாகரன், ஆலையடிவேம்பு வங்கி சமுர்த்தி முகாமையாளர் சிவப்பிரியா சுதாகரன், தெற்கு வங்கி சமுர்த்தி முகாமையாளர் கவிதா, ஆலையடிவேம்பு வடக்கு வங்கி சமுர்த்தி முகாமையாளர் சுரேஸ்காந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிரதேச செயலாளர் சம்பிரதாய பூர்வமாக விற்பனை சந்தையைத் திறந்து வைத்தார். இதன்போது, சமுர்த்தி பயனாளிகளால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் விற்பனையும் செய்யப்பட்டன.
இதில் பெரும் திரளான மக்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்திருந்தார்கள்.
சமுர்த்தி அபிமானி வர்த்தகக் கண்காட்சியும் விற்பனை சந்தையும் நாளைய தினமும் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.