ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் ”உறுமய” காணி உறுதிப்பத்திரம் வழங்கல் நடமாடும் சேவை….

”உறுமய” காணி உறுதிப்பத்திரம் வழங்கல் ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் நேற்றய தினம் (26) ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் பூரண அளிப்புகள் வழங்குவதற்கான நடமாடும் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அந்த வகையில் நடமாடும் சேவையின் இரண்டாம் நாளாகிய இன்றைய தினம் (27) காலை 9.30 மணிமுதல் 12.30 மணிவரை அக்கரைப்பற்று,வாச்சிக்குடா கிராம நிலதாரி பிரிவிலும், மு.ப 2.30 மணிமுதல் பி.ப 4.30 மணிவரை கோளாவில் – 02 கிராம நிலதாரி பிரிவிலும் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் ஆலையடிவேம்பு உதவி பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர், காணி உத்தியோகத்தர் லோஜினி கோகுலன் மற்றும் காணிப்பிரிவு உத்தியோகத்தர்கள் கிராம உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து மக்களுக்கான சேவையை வழங்கி இருந்தார்கள்.
இதன் போது பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற காணி அளிப்புக்கள் வழங்கக்கூடிய ஆவணங்களின் பிரதிகள் பொறுப்பேற்றுக்கொள்ளப்பட்டதுடன் முறையான ஆவணங்கள் இல்லாதவர்கள் மற்றும் காணி பிணக்குகள் உள்ளவர்களுக்கான ஆலோசனைகள் என்பனவும் உத்தியோகத்தர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் எதிர்வரும் 30ஆம் திகதிவரை நடமாடும் சேவை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இடம்பெறவுள்ளதுடன் குறித்த தினங்களில் உரிய ஆவணங்களுடன் வருகை தந்து காணி அளிப்பினை மக்கள் பெற்றுக்கொள்ளவும் முடியும்.