ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கான பிரதேச செயலாளர் நியமனம் தொடர்பாக புதிய லங்கா சுதந்திர கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் கருத்து!

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட இருப்பதாக அறியக்கூடியதாக இருக்கின்ற புதிய பிரதேச செயலாளர் நியமனம் தொடர்பாக பிரதேச பொதுமக்கள் மத்தியில் சந்தேகங்களும் மாறுபட்ட விமர்சனங்களும் தோன்றியுள்ளதாக அறியக்கூடியதாக இருக்கிறது.
இவ்வாறு இருக்கின்ற நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கான புதிய பிரதேச செயலாளர் நியமனம் தொடர்பாக புதிய லங்கா சுதந்திர கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளரான க.ரகுபதி அவர்கள் நேற்றய தினம் (03/08/2023) கருத்து வெளியிட்டிருக்கிறார் .
குறித்த கருத்து பின்வருமாறு,
” பிரதேச செயலாளர் எமது பிரதேச மக்களின் கலாச்சாரத்தையும் விழுமியங்களையும் கொண்டதோர் தமிழ் சமூகம் சார்ந்த ஒருவரையே எமது மக்கள் விரும்புகின்றனர்.
பிரதேச செயலக வளாகத்தில் உள்ள ஆலய யாப்பின் அடிப்படையில் ஆலயத்தின் தலைவராக பிரதேச செயலாளரே இருத்தல் வேண்டும் இதனையும் நினைவில் கொள்ளவேண்டும்.
கடந்த காலங்கலைப்போல் அல்லாது ஊழல்கள் அற்றதும் மக்களின் தேவை அறிந்து சேவை செய்யவும் அவர்களின் விறுப்பு வெறுப்புக்களை புரிந்த ஒருவராகவும் பிரதேச நிலத்தையும் எல்லைகளையும் வளங்களையும் கட்டிக்காக்கும் ஒருவராகவும் இருக்கவேண்டும் என்பதே என்னுடைய கருத்தாக உள்ளது.” என்றவாறு தெரிவித்திருக்கிறார்.