இலங்கை
யாழில் பலத்த மழை – இன்று காலை மினி சூறாவளி!

யாழ்ப்பாணத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை வீசிய மினி சூறாவளி காரணமாக வீடொன்றின் பயன்தரு மரங்கள் மற்றும் மதில்ச் சுவர்கள் வீழ்ந்து நாசமாகியுள்ளன.
யாழ் குடா நாட்டில் இன்று காலை பலத்த மழை பெய்த நிலையில் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்றில் சுமார் 04:15 மணியளவில் இவ்வாறு மினி சூறாவளி தாக்கியுள்ளது.
இதனால் வீட்டின் சுற்று மதில் 450 அடி பாறி வீழ்ந்துள்ளதுடன், பயன் தரு மரங்களான தென்னை, வாழை என்பனவும் முறிந்து வீழ்ந்துள்ளன.
எனினும் இந்த சம்பவத்தில் உயிர் ஆபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழையுடனான காலநிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.