ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இரண்டாம் கட்டமாக இணைத்துக்கொள்ளப்படவுள்ள பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை…

வி.சுகிர்தகுமார்
அரச தொழிலில் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
முன்னதாக பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும்போது தவறவிடப்பட்டவர்களுக்கான நேர்முகப்பரீட்சைகளும் தற்போது இடம்பெற்று வருகின்றன.
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இரண்டாம் கட்டமாக இணைத்துக்கொள்ளப்படவுள்ள பட்டதாரிகளுக்கான நேர்முகப்பரீட்சை இன்று இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் வி.பபாகரனின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்ற இந்நேர்முகப்பரீட்சை உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் தலைமையில் மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.பிரதீப் மற்றும் சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி. ரவிச்சந்திரன் முன்னிலையில் இடம்பெற்றது.
இந்நேர்முகப்பரீட்சையில் பட்டதாரிகளின் கல்வி சான்றிதழ் மற்றும் பட்டப்படிப்பு சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டதுடன் விரைவில் இவர்களுக்கான நியமனங்களும் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.