ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்படும் கொவிட் நிவாரணம்: குற்றசாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் மத்தியில்….

-கிரிசாந் மகாதேவன்-
ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்படும் கொவிட் நிவாரணம்: குற்றசாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் மத்தியில்….
ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் ஊடாக கொவிட் நிவாரணம் அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய இடர்கால உலர் உணவுப்பொதிகள் ஆலையடிவேம்பு பிரதேச சமுர்த்தி பயனாளிகள் மற்றும் சமுர்த்தி பெற தகுதியானவர்களுக்கு மாத்திரம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேற்படி கொவிட் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை தொடர்பாக ஆங்காங்கே மக்களால் சமூக வலைத்தளங்கள் மற்றும் பொது வெளியில் குற்றம் சாட்டப்பட்டு விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
கொரோனா அச்சுறுத்தல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக உணவுப்பொருள் கொள்வனவு செய்ய முடியாமலும் தொழிலுக்கு செல்லமுடியாமல் இக்கட்டான நிலையில் வாழும் மக்கள் குறித்த நிவாரணம் தொடர்வில் குழப்பம் அடைந்துள்ளார்கள்.
இதுவரையில் சுமார் 3000 இற்கும் மேற்பட்ட மக்களுக்கான நிவாரணம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இன்னமும் சுமார் 3000 மக்களுக்கான நிவாரணம் வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிவாரணம் தொடர்வாக சமூக வலைத்தளங்களியில் குறிப்பிடப்படும் பதிவுகள் சில
சுமத்தப்படும் ஒருசில குற்றசாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் எந்த அளவிற்கு ஆரோக்கியமானதாகவும் நம்பகத்தன்மை வாய்ந்தமை என்பது கேள்விக்கு உரியதாக காணப்படுகின்றது.
எது எவ்வாறாக இருக்கின்ற போதிலும் சம்பந்தப்பட்ட மேலதிகாரிகள் குறித்த குற்றசாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் என்பவற்றினை பரிசீலினை செய்து இன்னமும் நேர்த்தியானதாகவும் நம்பகத்தன்மை வாய்ந்தமையானதாகவும் மக்கள் குழப்பம் அடையாத முறையில் தங்கள் கடமையினை மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கையினை முன்வைக்கின்றோம்.
மக்களுக்கான தீர்வுகள் சரிவர கிடைக்க படாமல் இருக்கும் சாந்தப்பத்தில் செய்தி பதிவு இன்னமும் ஆழமானதாக தொடரும்….
நன்றி ஐயா எனது அம்மம்மாவைப் போல் உள்ள பலருக்கும் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது, அவரைப் போலவே முதியோர் உதவி பெறும் ஏனையோருக்கும் வழங்கப்பட்டுள்ளது, அது குற்றமல்ல ஆதரவற்ற முதியவர்களுக்கு வழங்குவது. இவர் மட்டும் ஏன் கழிக்கப்பட்டார் என்பதே எனது வாதம்