சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் சம்மாந்துறை வலயத்தில் 4ம் இடம்.

சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் 2019ம் ஆண்டின் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சம்மாந்துறை வலயத்தில் 25 வது இடத்தினைப் பெற்று இருந்தது. தற்போது கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் (2020) ம் ஆண்டு பெறுபேறுகளின் தரவரிசையில் சம்மாந்துறை கல்வி வலயத்தில் கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் பாடசாலை 4ம் இடத்தினைப் பெற்றுள்ளது. என பாடசாலை அதிபர் சோ. இளங்கோவன் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில் 2019ம் ஆண்டு நடைபெற்ற சாதாரண தர பரீட்சைக்கும் 2020ம் நடைபெற்ற சாதாரண தர பரீட்சைக்கும் இடையில் மிகவும் சிறப்பான முன்னேற்றத்தினை சம்மாந்துறை கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயம் கண்டுள்ளது.
இந்த முன்னேற்றத்திற்கு சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் பாடசாலையின் வளர்ச்சிக்கு அயராது பாடுபடுகின்றவர் அவருக்கு பாடசாலை சார்பாக எனது நன்றியை தெரிவித்துக்கொள்வோதோடு மாலை நேர வகுப்புக்களுக்கு வருகை தந்து இந்த பெறுபெறுகளை பெற்றுத்தருவதற்கு பாடசாலை ஆசியர்களுக்கு எனது நன்றியையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொண்டார்.