ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுமூகமான முறையில் தபால்மூல வாக்களிப்பு இன்று..

வி.சுகிர்தகுமார்
2020 பொதுத்தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நேற்றுமுதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
இதற்கமைவாக இரண்டாம் நாளான இன்று (14) பிரதேச செயலகம் மற்றும் அரச திணைக்களங்களிலும் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றன.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுமூகமான முறையில் தபால்மூல வாக்களிப்புகள் இன்று காலை முதல் இடம்பெறுகின்றன.
118 உத்தியோகத்தர்கள் வாக்களிப்பிற்காக தகுதி பெற்றுள்ள நிலையில் தகுதி பெற்றவர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டதை இங்கு காண முடிந்தது.
இதேநேரம் வாக்களிப்பு நிலையங்களை பார்வையிட மாவட்ட செயலக தேர்தல் செயலக கண்காணிப்பு உத்தியோகத்தர்கள் வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

