ஆலையடிவேம்பு பிரதேச செயலக புதிய பிரதேச செயலாளர் நமது மண்ணின் மைந்தன் வி.பபாகரன் ஓர் விசேட பார்வை….

ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோளாவில் கிராமத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட நமது மண்ணின் மைந்தன் வினாசித்தம்பி பபாகரன் தனது ஆரம்பக் கல்வியை கோளாவில் பெருநாவலர் வித்தியாலயத்தில் கற்றதுடன் உயர்தரக் கல்வியை அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய கல்லூரியில் பயின்று.
கடந்த 2003 ஆம் வருடம் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்குத் தெரிவாகி அங்கு மனித வள முகாமைத்துவத்தில் சிறப்புக் கற்கையுடன் தனது இளமானிப் பட்டப்படிப்பைப் பூர்த்திசெய்திருந்தார்.
கடந்த 2012 ஆம் வருடம் இடம்பெற்ற திறந்த போட்டிப் பரீட்சை மூலம் இலங்கை நிருவாக சேவைக்குத் தெரிவான அவர் மன்னார் மாவட்டத்துக்கான உதவி அரசாங்க அதிபராகத் தனது அரச சேவையைத் தொடந்தார்.
அவ்வேளையில் விசேட புலமைப்பரிசில் மூலம் அவுஸ்திரேலிய தேசத்தில் மனித வள முகாமைத்துவத்தில் தனது இரண்டு வருட முதுமானிக் கற்கையை முடித்த பின்னர் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உதவி செயலாளராகக் கடமையாற்றிவந்த நிலையில்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ள இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர் வினாசித்தம்பி பபாகரன் இன்று (19) மதியம் சுபவேளையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
மேலும் தாயாரின் ஆசிகளுடன் பிரதேச செயலாளர் கடமையை ஏற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.