ஆலையடிவேம்பு பிரதேச சாகாம வீதி கோளாவில் -02 பிரதான வீதியில் நீண்ட காலமாக மக்களுக்கு இடைஞ்சலாக இருந்த மின்கம்பங்கள் இன்று அகற்றப்பட்டது: மக்கள் மகிழ்ச்சி….

-கிரிசாந் மகாதேவன்-
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச சாகாம வீதி கோளாவில் -02 பிரதான வீதியில் நீண்ட காலமாக மக்களுக்கு இடைஞ்சலாக வீதி ஓரங்களில் காணப்பட்ட மின்கம்பங்கள் மூலமாக கடந்த காலங்களில் மக்களின் உயிரிழப்பும், வாகன விபத்துகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போதைய நிலையில் அப்பாதையில் மீன்சந்தை, வைத்திய கிளினிக் நிலையம் மற்றும் கடைத்தொகுதிகள் அமைந்துள்ளதால் மக்கள் நடமாட்டமும் வாகன நெரிசலும் அதிகமாக காணப்படுவதுடன் குறித்த மின்கம்பங்களால் ஆபத்து தன்மை அதிகளவில் காணப்பட்டது.
குறித்த விடையங்களை கவனத்தில் கொண்டு அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச பற்றாளர் அவர்களினால் தொடர்ச்சியாக குறித்த மின்கம்பங்களை ஒழுங்குபடுத்த பலமுயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது.
அதனில் ஒரு அங்கமாக அக்கரைப்பற்று இலங்கை மின்சார சபை காரியாலய மின்பொறியியலாளர் மற்றும் அக்கரைப்பற்று வீதி அபிவிருத்தி அதிகார சபை காரியாலய பொறியியலாளர் அவர்களுக்கு குறித்த மின்கம்பங்கள் தொடர்வன பிரதேச மக்களின் நிலைப்பாட்டினை கோரிக்கை கடிதங்கள் மூலமாக அவர்கள் கவனத்திற்கு கொண்டுசென்றார்.
கோரிக்கையானது மின் இணைப்பு அற்ற பயன்பாடற்ற மின்கம்பங்களை அகற்றவும் மேலும் பாதசாரிகள் செல்வதற்கு ஒதுக்கப்பட்ட பாதையோரங்களில் மின்கம்பிகள் இணைக்கப்பட்ட மின்கம்பங்களும் பொதுமக்களுக்கு இடைஞ்சலாக இருந்து வருகின்றது குறித்த மின்கம்பங்களை ஒழுங்குபடுத்தி தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
குறித்த விடையங்களை ஆராய்ந்து இன்றைய தினம் குறித்த மின்கம்பங்கள் அகற்றப்பட்டும் மற்றும் ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதுவும் காணக்கூடியதாக இருந்தது.
குறித்த மின்கம்பங்கள் ஒழுங்குபடுத்தல் செயற்பாடு குறித்து பிரதேச மக்கள் மகிழ்ச்சியடைவதுடன் மின்கம்பங்கள் ஒழுங்குபடுத்தல் செயற்பாட்டிற்கு முன்னின்று செயற்பட்டவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றனர்.