ஆலையடிவேம்பு பிரதேச சபையில் சுனாமி அழிப் பேரலையாலும், திக்வா புயலாலும் உயிரிழந்தவர்களுக்கு நினைவேந்தல்.

2004 டிசம்பர் 26 ஆம் திகதி தெற்காசியாவை உலுக்கிய ஆழிப்பேரலைக்கு இன்று( 26) வெள்ளிக்கிழமை அகவை 21 ஆகின்றது.
அதனையொட்டி நாடெங்கிலும் ஆழிப்பேரலை தின வைபவங்கள் நடாத்த பரவலாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.
அந்த வகையில் இன்றைய தினம் (26) காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரையுள்ள காலப்பகுதியில் ஆலையடிவேம்பு பிரதேச சபை கேட்போர் கூட மண்டபத்தில் சுனாமி மற்றும் டித்வா புயல் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் நினைவஞ்சலி இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் ஆர்.தர்மதாச தலைமையிலும் பிரதேச சபை செயலாளர் சீ.திவாகரன் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது இதனை தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் கௌரவ சபை உறுப்பினர்கள் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபை ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தார்.
இலங்கையிலே அதிகூடிய உயிரிழப்புகளையும் சொத்திழப்புகளையும் சந்தித்தது அம்பாறை மாவட்டமாகும்.
இலங்கையில் 35ஆயிரம்பேரைக் காவுகொண்ட ஆழிப்பேரலை அம்பாறை மாவட்டத்தில் மட்டும் அதிகூடிய 10,436 பேரைக்காவுகொண்டமை குறிப்பிடத்தக்கது.



