ஆலையடிவேம்பு
Trending
ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர்களுக்கான சபை நடவடிக்கைகள் மற்றும் கூட்ட நடவடிக்கைகள் தொடர்பான செயலமர்வு….

ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு புதிதாக தெரிவாகிய கெளரவ உறுப்பினர்களுக்கான சபை நடவடிக்கைகள் மற்றும் கூட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஒருநாள் செயலமர்வு இன்று (18) வெள்ளிக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஆ.தர்மதாச அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
ஆலையடிவேம்பு பிரதேச சபை கலந்துரையாடல் மண்டபத்தில் நடைபெற்ற இந்த செயலமர்வு, உறுப்பினர்களின் கடமைகளையும் பொறுப்புகளையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த செயலமர்வில் வளவாளர்களாக ஆய்வு உத்தியோகத்தர் M. M. M.ரிஸ்வி மற்றும் B.சுமதி ஆகியவர்கள் செயற்பட்டிருந்தனர்.
ஆரம்ப நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் செயலாளர் ரா.சுரேஷ்ராம் கலந்துகொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.