ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சபையினால் கால்நடை உரிமையாளர்களுக்கு விடுக்கப்படும் அறிவித்தல்!!

எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பிரதான வீதிகளில் கட்டாக்காலி கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதனால், அது போக்குவரத்திற்கு இடைஞ்சலாகவும் பல வீதி விபத்துக்களையும் ஏற்படுத்துகின்றது.
இனி வருகின்ற நாட்களில் வீதிகளில் கட்டாக்காலிகளாக நடமாடும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு, அதன் காதுகளில் காணப்படும் அடையாளம் மற்றும் அதன் உடலில் காணப்படும் அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதனால்.
கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை பாதுகாப்பாக பராமரித்துக்கொள்ளுமாறு ஆலையடிவேம்பு பிரதேச சபையின் செயலாளர் திரு.R.சுரேஷ்ராம் பிரதேச கால்நடை உரிமையாளர்களுக்கு அறியத்தருகிறார்.