ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் செயலாளர் ரா.சுரேஷ்ராம் வழிநடத்துடலுடன் பிரதேசத்தின் வெல்ல நீர் வடிந்தோடுவதற்கான ஏற்பாடுகள்….


ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளம் தற்போது வரை பல பகுதிகளில் தேங்கி இருப்பதனால் பிரதேச மக்கள் பலதரப்பட்ட இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இவற்றினை கருத்தில் கொண்டு வெல்ல நீர் வடிந்தோடுவதற்கான ஏற்பாடுகளை இன்றைய தினம் (29) ஆலையடிவேம்பு பிரதேச சபையின் செயலாளர் ரா.சுரேஷ்ராம் வழிநடத்துடலுடன் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் பங்களிப்புடன் ஜேசிபி இயந்திரம் மூலமாக பிரதேசத்தின் ஒரு பகுதியில் முன்னெடுத்திருந்தனர்.
மேலும் விடுபட்டு இருக்கும் பகுதிகளுக்கு நாளைய தினம் குறித்த செயற்பாடுகளை முன்னெடுக்க தீர்மானித்து இருப்பதுவும் குறிப்பிடத்தக்கது.

