ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலயத்தின் மதில்கள் விழிப்பூட்டல் மிகு அழகிய சுவரோவியங்களால் அழகுபடுத்தல் நடவடிக்கை….

-கிரிசாந் மகாதேவன்-
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலயத்தின் மதில்கள் விழிப்பூட்டல் மிகு அழகிய சுவரோவியங்களால் அழகுபடுத்தப்பட்டு வருகின்றது.
சத்தியம் (வாழும் போதே வழங்கிடுவோம்) அமைப்பின் அனுசரணையில் பாடசாலை அதிபர் த.இராசநாதன் அவர்களின் ஏற்பாட்டில் பாடசாலையின் சித்திரப்பாட ஆசிரியர் தா.சந்திரகுமார் அவர்கள் பாடசாலையின் மதில்களை அழகுபடுத்தும் சுவரோவியங்களை வரைந்து வருகின்றார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கண்ணகிபுரம் திகோ/கண்ணகி வித்தியாலய பாடசாலை பிரதேசத்தில் காணப்படும் அதிகஷ்ட பிரதேச பாடசாலையாக காணப்படுகின்ற போதிலும் தற்போது கல்வி சார்ந்து மற்றும் பௌதீகவள அபிவிருத்தி சார்ந்து வழந்துவரும் ஒரு பாடசாலையாக காணப்படுகின்றது.
பிரதேச பாடசாலைகளில் பல பாடசாலைகள் தேவையான (CCTV) கேமராக்களை பொருத்தி இருக்கின்ற போதிலும் குறித்த திகோ/கண்ணகி வித்தியாலய பாடசாலைக்கு இதுவரையில் (CCTV) காமராக்களை பொருத்துவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் இதுவரையில் பொருத்தப்படாதுள்ளது.
குறித்த (CCTV) காமராக்களை பொருத்தும் நடவடிக்கைக்கு தங்களால் இயன்ற பங்களிப்புக்களை சமூக அமைப்புக்கள் அல்லது நலன் விரும்பிகள் முன்வந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றார் பாடசாலையின் அதிபர் அவர்கள்.