ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரின் ஏற்பாட்டில் ஒருலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிவழங்கும் நிகழ்வு….

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரின் ஏற்பாட்டில் வாழ்வாதார உதவிவழங்கும் நிகழ்வு நேற்று (04.09.2022) மாலை 04.30 மணியளவில் இந்துமாமன்ற வளாகத்தில் திரு.கந்தையா குகநாதன் அவர்களின் நிதி அனுசரனையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் சுயதொழிலை ஊக்குவிக்கும் முகமாக திருமதி.முரளிதரன் என்பவருக்கு 50,000/- பெறுமதியான உபகரணங்கள், திரு யோகநாதன் என்பவருக்கு 20,000/-பணத்தொகை, மற்றும் ரேகா என்வருக்கு 30,000/- பெறுமதியான சில்லறை கடைக்கான பொருட்கள் என்பனவும் வழங்கிவைக்கப்பட்டது. மொத்தமாக ஒருலட்சம் பெறுமதியான பணத்தொகையை இவ்வாறாக பகிர்ந்தளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் திரு.வே.சந்திரசேகரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் நிதி அனுசரனை வழங்கிய திரு.கந்தையா குகநாதன் மற்றும் இந்துமாமன்ற உறுப்பினர்கள் என பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு இருந்தனர்.