ஆலையடிவேம்பு பிரதேச இந்துமான்றத்தினால் அறநெறி ஆசிரியர்கள் மற்றும் இந்து குருமார்கள் 150 பேருக்கு உலர் உணவு பொதிகள் இன்று வழங்கப்பட்டது.

-அபிராஜ்-
கோவிட்-19 மூன்றாம் அலையின் தாக்கத்தினால் மக்கள் பெரிதும் இயல்பு நிலையில் இருந்து மாறுபட்ட கட்டுப்பாடுகளுடன் வரையறுக்கப்பட்ட வசதிகளுடன் வாழ்ந்து வருகின்ற இப்போதைய காலகட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமான்றத்தினால் அறநெறி ஆசிரியர்கள் மற்றும் இந்து குருமார்கள் 150 பேருக்கு தலா 1500 பெறுமதியான உலர் உணவு பொதிகள் இன்று (21) வழங்கப்பட்டது.
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரின் முயச்சியால் இதற்கான நிதி உதவி அகில இலங்கை இந்துமாமன்றத்தினால் வழங்கப்பட்டது என்பதுடன் குறித்த நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமான்றத்தின் தலைவர் திரு.வே.சந்திரசேகரம், செயலாளர் தேசமானி ஶ்ரீ.மணிவண்ணன், பொருளாளர் ஆ.தர்மதாச, இந்துமாமன்ற அங்கத்தவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றிய தலைவர் மற்றும் கலாசார உத்தியோகத்தர் என்பவர்கள் பங்குபற்றினர்.
இவ் உலர் உணவுப் பொதிகள் அறநெறி ஆசிரியர்கள் மற்றும் இந்து குருமார்கள் இடங்களுக்கு நேரில் சென்று உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டதுடன் குறித்த நிகழ்வானது கொரோனா தடுப்பு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.