ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமான்றத்தினால் அறநெறி ஆசிரியர்கள் 43 பேருக்கு உலர் உணவு பொதிகள் சிவன் அருள் பவுண்டேசனின் அனுசரணையில் முதற்கட்டமாக வழங்கப்பட்டது.

கோவிட்-19 மூன்றாம் அலையின் தாக்கத்தினால் மக்கள் பெரிதும் இயல்பு நிலையில் இருந்து மாறுபட்டு கட்டுப்பாடுகளுடன் வரையறுக்கப்பட்ட வசதிகளுடன் வாழ்ந்து வருகின்ற இப்போதைய காலகட்டத்தில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமான்றத்தினால் அறநெறி ஆசிரியர்கள் 43 பேருக்கு தலா 1500 பெறுமதியான உலர் உணவு பொதிகள் இன்று (17) முதற்கட்டமாக வழங்கப்பட்டது.
இதற்கான நிதி உதவி சிவனருள் பவுண்டேசனால் வழங்கப்பட்டது என்பதுடன் அப்பொதிகள் கண்ணகிபுரம், கவடாப்பிட்டி, பனங்காடு, கோளாவில், அக்கரைப்பற்று, ஆகிய பகுதிகளுக்கு நேரில் சென்று ஆசிரியர்கள் இடத்திலேயே உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.