ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தில் தைப்பூசத் திருவிழா சிறப்பான முறையில் இன்று!

தமிழர் திருவிழாவான தைப்பூசத் திருவிழா தமிழ் மக்கள் இடையே ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தினரினால் இன்றைய தினம் (28) காலை வேளையில் நாட்டில் நிலவிவரும் கொரோனா சூழ்நிலை விலகவும் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டும் குறித்த பூசை வழிபாடு இடம்பெற்றது.
இன் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் திரு.சி.கனகரெத்தினம் (ஓய்வுபெற்ற பிரதம கணக்காய்வாளர்) அவர்களின் தலைமையின் இந்து மாமன்ற செயலாளர் திரு.ந.சுதாகரன்(விரிவுரையாளர்), பொருளாளர் திரு.மணிவண்ணன் (அதிபர்) அவர்கள் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற உறுப்பினர்கள் பங்களிப்புடன் சிறப்பானதாக இடம்பெற்றது.
மேலும் குறித்த பூஜை வழிபாடுகளிள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.