ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரினால் நாவற்காடு பகுதி 72 குடும்பங்களுக்கு நிவாரணப்பொதி வழங்கிவைப்பு….

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட நாவற்காடு கிராம சேவகர் பிரிவில் 70 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளை கொண்ட 72 குடும்பங்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரினால் இன்றைய தினம் (05) இரண்டாயிரம் ரூபாய் பெறுமதியான நிவாரணப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
இதற்கான நிதி அனுசரனையினை அகில இலங்கை இந்துமாமான்றாத்தினர் வழங்கியதுடன் நாவற்காடு பகுதி கிராம சேவகர் பரிந்துரைத்த குடும்பங்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தின் தலைவர் பி.தணிகாசலம் தலைமையில் மன்ற உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் இந்துமாமன்ற கட்டடத்தில் வைத்து குறித்த நிவாரணப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
நாவற்காடு கிராமசேவகர் பகுதி அண்மையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதி என்பதும் குறிப்பிட்டத்தக்கது.
மேலும் இயற்கை பேரிடரில் பெரிதும் பாதிக்கப்பட்ட (மலையாக) மக்களுக்கு வழங்கிவைக்க நிவாரணப்பொருட்கள் சேகரிக்கும் பணியை ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் சம்மேளனம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச பொது அமைப்புகள் இணைந்து ஆலையைவேம்பு பிரதேசத்தில் மேற்கொண்டிருந்த நிலையில் அதற்கும் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினர் 50,000/- பெறுமதியான பொருட்களை வழங்கி வைத்திருந்தமையும் போற்றத்தக்கது.



