ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினரால் நடாத்தப்பட்ட திருஞானசம்பந்தர் குருபூசை நிகழ்வு…..

திருஞானசம்பந்தர் குருபூசை தின நிகழ்வு கோளாவில் , அம்பாள் பாலர் பகல்நேர பராமரிப்பு நியாயத்தில் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் பெ.தணிகாசலம் தலைமையில் மிகவும் சிறந்தமுறையில் இன்று (15) பி.ப 3.30 மணியளவில் இடம்பெற்றது.
நிகழ்வுகளாக இறை வணக்கம், மங்கல விளக்கேற்றல், வரவேற்புரை, தலைமை உரை, சிறப்பு உரை, கோளாவில் சிவசக்தி அறநெறிப் பாடசாலை மாணவர்களின் ஆற்றுகை நிகழ்வுகள், நிகழ்வுகளில் கலந்துகொண்ட அறநெறி மாணவர்களுக்கு பரிசுப்பொருள் வழங்கி வைக்கப்பட்டதுடன் மற்றும் நன்றியுரை என்பனவும் இடம்பெற்றது.
திருஞானசம்பந்தர் அவர்களின் சிறப்புக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அறநெறி கல்வியினை ஊக்குவிக்கும் முகமாகவும் குறித்த நிகழ்வு திறன்பட இடம்பெற்றிருந்தது.

