ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இருந்து அம்பாறை மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கரிகரன் டிலக்ஷன் மகத்தான வெற்றி…

இளைஞர் பாராளுமன்ற தேர்தல் கடந்த 22 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது இதில் எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இருந்து இருவர் ( ஓர் இளைஞன் மற்றும் ஓர் யுவதி) போட்டியிட்டனர்.
இவ் இளைஞர் நாடாளுமன்ற தேர்தலில் கரிகரன் டிலக்ஷன் 490 வாக்குகளை பெற்று மேலும் சக வேட்பாளரை விட 310 வாக்குகள் பெற்று இளைஞர் நாடாளுமன்ற தேர்தலுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் (310) வெற்றிபெற்றவர் தரவரிசையில் முதலாம் இடத்திலும் மேலும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையில் (490) 5ஆம் இடத்திலும் காணப்படுகின்றார்.