ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தில் நவராத்திரி பூஜை நிகழ்வு மிகவும் பக்திபூர்வமாக…

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தில் நவராத்திரி பூஜை நிகழ்வு இன்றைய தினம் (22/10/2023) ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணியளவில் இந்துமாமன்ற தலைவர் திரு.பெ.தணிகாசலம் அவர்களின் தலைமையில் மிகவும் பக்திபூர்வமாக இடம்பெற்றது.
இந் நிகழ்வுகள் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற வளாகத்தில் இடம்பெற்றதுடன் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற செயலாளர் திரு.ந.சுதாகரன் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் நிகழ்வை கலந்து சிறப்பித்திருந்தனர்.