ஆலையடிவேம்பு பிரதேச அளிக்கம்பை கிராமத்தில் ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையம் இன்று திறந்து வைப்பு….

ஆலையடிவேம்பு பிரதேச அலிக்கம்பை கிராமத்தில் ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையம் இன்று (23) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் G.சுகுணன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
அலிக்கம்பை பிரதேச மக்களின் நீண்ட நாள் வைத்திய தேவை தொடர்பில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களுக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் பலனாக குறித்த ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையம் மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வுக்கு பலரும் அதிதிகளாக கலந்து கொண்டதுடன் நிகழ்வானது சுகாதார நடைமுறைகளுடன் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையமானது திங்கள் , புதன் , வெள்ளி ஆகிய நாட்களில் மக்களின் வைத்திய தேவைக்காக திறக்கப்பட உள்ளத்துடன்.
குறித்த ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையமானது எதிர்காலத்தில் நோயாளர் காவு வண்டி (Ambulance) உடன் கூடிய வைத்திய நிலையமாக மாற்றப்பட வேண்டிய தேவைப்பாடு உடையதாக காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.