ஆலையடிவேம்பு பிரதேச, அக்கரைப்பற்று 7/4 பிரிவு சமுர்த்தி வீதியின் இன்றைய நிலையும்:பிரதேசவாழ் மக்கள் கோரிக்கையும்….

-M.கிரிசாந்-
ஆலையடிவேம்பு பிரதேசம், அக்கரைப்பற்று 7/4 பிரிவு சமுர்த்தி வீதி நீண்ட நாட்களாக வீதியில் நீர் தேங்கி நிற்பதனால் அவ்வீதியுடான மக்களின் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
மிக நீண்ட காலமாக புனரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் இவ் வீதியை மழைகாலத்தில் வெள்ளம் முழுமையாக மூடி இவ் வீதியில் தேங்கி நிற்பதனால் வீதி சேதமடைந்து மோசமான நிலையில் காணப்படுகின்றது.
தற்போதும் இவ் குறித்த வீதியின் நீர் தேங்கி நிற்பதனால் வீதியில் பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பல குடும்பங்கள் வசித்து வரும் இவ் வீதியில் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கு முறையான வடிகான் தொகுதி இல்லாமல் இருப்பதனால் சிறு மழை பெய்ந்தால் கூட நீர் வீதிகளில் தேங்கி நிற்பதால் மக்கள் பல வருடங்களாக பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே இவ் பகுதிக்கான முறையான வடிகான் கட்டமைப்பு தொகுதியினை அமைத்து தருமாறும் மற்றும் இவ் நிலைமைக்கு செய்ய வேண்டிய உடனடி பராமரிப்பு வேலைகளை செய்து தருமாறும் பிரதேசவாழ் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் குறித்த விடயத்தினை உரிய தரப்பினர் கவனத்தில் கொண்டு துரித நடவடிக்கை எடுத்து, மக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கின்றனர்.