அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரம் பிரதேசத்தில் சுனாமி தின நிகழ்வு
இலங்கையில் சுனாமி அனர்த்தம் இடம்பெற்று பதினைந்தாவது ஆண்டு நிறைவையொட்டி அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரம் இரட்சகர் தேவாலயத்தில் உயிர் நீத்தவர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்வு இன்று இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டத்தில் ஐயாயிரத்திரத்திற்கும் அதிகமான உயிரழிவுகளையும் பாரிய சொத்தழிவுகளையும் ஏற்படுத்திய சுனாமி தின நிகழ்வு இம்மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்கள் பலவற்றில் இடம்பெற்றன.
அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரம் நாற்பதாம் கட்டைப் பிரதேசத்தில் ஆழிப் பேரலையினால் உயிரிழந்த 152 பேரின் ஆத்ம சாத்திக்காகவும் அவர்களின் ஈடேற்றத்திற்காகவும் வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் உயிரிழந்த குடும்பத்தவர்களின் உறவினர்கள், மத ஸ்தானங்களின் தலைவர்கள், பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் போன்ற பலர் கலந்து கொண்டனர்.
இப்பிரதேசத்தில் சுமார் 55 சிறுவர்கள் ஆழிப் பேரலையின் காரணமாக உயிரிழந்தனர்.
இதன்போது உயிரிழந்தவர்களின் நினைவாகவும் அவர்களின் ஆத்ம சாந்திக்காகவும் வேண்டி சுடர் ஏற்றப்பட்டதுடன், மௌன அஞ்சலியும் இடம்பெற்றது. இதேவேளை திருப்பலி ஒப்புக் கொடுக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. திருப்பலி ஒப்புக் கொடுக்கும் நிகழ்வு மற்றும் ஆராதனை நிகழ்வினை பங்குத்தந்தை ஜோசப் நிதர்சன் பீற்றர்ஸ் அடிகளால் மேற்கொள்ளப்பட்டன.