ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு உட்பட்டகோளாவில் பிரதேசத்தில் கோளவில் மக்கள் அபிவிருத்தி மையம் மற்றும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினால் இடம்பெற்ற மாபெறும் வைத்திய முகாமும் இரத்ததானமும்.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட கோளவில் விநாயகர் மகாவித்தியாலயத்தில் மாபெரும் நடமாடும் மருத்துவ முகாம் ஆனது கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து கோளவில் மக்கள் அபிவிருத்திமையத்தினால். இவ் இலவச வைத்திய முகாம் நடைபெற்று முடிந்தது.
இவ் நிகழ்வானது காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கபட இருந்த போதிலும் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகியது. இச்சேவையினை வழங்குவதற்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை சத்திர சிகிச்சை வைத்தியர் ரவீந்திரன், ஜெய் வைத்தியசாலை ஸ்தாபகர் வைத்தியர் சித்திரா, பொது வைத்தியர் ரெமன்ஸ், கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலை வைத்தியர் குமனன், வைத்தியர் இதையகுமார், வைத்தியர் திலிப்குமார், தாதியர்கள் மற்றும் இயன் மருத்துவ்வியலாளர் கரன் இவர்களுடன் கோளவில் மக்கள் அபிவிருத்தி மையம் இணைந்து இச்சேவையினை மக்களுக்காக வழங்கியிருந்தது.
இன் நிகழ்வானது இறைவனக்கத்துடன் மங்கலவிளக்கு ஏற்றப்பட்டு,கோளவில் மக்கள் அபிவிருத்தி மையத்தின் தலைவரால் வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டு , கோளவில் விநாயகர் மகா வித்தியாலய மாணவர்களால் வரவேற்பு நடனமும் அரங்கேற்றப்பட்டு, வைத்திய நிபுணர் ரெமன்ஸ் அவர்களின் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு உரையும், இயன் மருத்துவவியலாளர் கரன் அவர்களால் சிறப்பு உரை நிகழ்த்தப்பட்டது.
இதனை தொடர்ந்து வைத்தியர்களால் பொது மக்களுக்கு விசேட பொது வைத்திய நிபுணர் சேவை, கதிரியக்கவியல் நிபுணர் சேவை, நிபுணத்துவ இயன் மருத்துவசேவை, தொற்றா நோய் தடுப்பு விழிப்புணர்வு, இரத்த அழுத்த பரிசோதனை, சக்கரை நோய் பரிசோதனை, விசேட உணவு ஊட்டச்சத்து போசணையாளர் சேவை, மற்றும் ஏனைய பொது வைத்திய சேவைகள். வழங்கப்பட்டது. அத்துடன் பொதுமக்களால் இரத்ததானம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.