ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இருந்து மருத்துவ நிர்வாகத்துறை கற்கை நெறிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள வைத்தியர் திருமதி குணாளினி சிவராஜ் அவர்களுக்கு வாழ்த்துகள்….

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இருந்து மருத்துவ நிர்வாகியாக (MSc in Medical Administration) பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியர் திருமதி குணாளினி சிவராஜ் அவர்கள் மருத்துவ நிர்வாகத்துறை கற்கை நெறிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவ துறையின் நிருவாக துறைக்கான போட்டிப்பரீட்சையில் தோற்றிய அவர் கடந்த மே மாதம் வெளிவந்த முடிவுகளின் பிரகாரம் சித்தியடைந்ததுடன், கடந்த வாரம் இடம்பெற்ற நேர்முகத்தேர்விலும் சித்தியடைந்துள்ளார்.

இதன் அடிப்படையில் இன்று வெளியிடப்பட்ட சித்தியடைந்தோர் பட்டியலில் அவர் பெயர் வெளியிடப்பட்டுள்ளது, இந் நிலையில் கல்முனை பிராந்தியத்தில் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ் பெண் வைத்திய அத்தியட்சகர் இவர் என்பதுடன் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு மண்ணில் தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது வைத்திய அத்தியட்சகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இருந்து மருத்துவ நிர்வாகத்துறை கற்கை நெறிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள வைத்தியர் திருமதி குணாளினி சிவராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

 

Related Articles

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker