ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மாடுகள் வாங்கித்தருவதாக பணமோசடியில் ஈடுபட்டு வந்த அக்கரைப்பற்றினை சேர்த்தவர் மக்களினால் மடக்கிப்பிடிப்பு…

அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள மக்களிடம் மாடுகள் வாங்கித்தருவதாக கூறி அவர்களிடம் இருந்து பணங்களை பெற்று பணமோசடியில் ஈடுபட்டு வந்ததாக அக்கரைப்பற்றினை சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் இன்று காலை வேளையில் ஆலையடிவேம்பு மக்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு அதன் பின் அக்கரைப்பற்று பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக குறித்த சந்தேக நபரினை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றமையும் குறிப்பிடத்தக்கது.