ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சடுதியாக அதிகரித்துவரும் கொவிட்-19 தொற்று: எப்போதும் இல்லாதவாறு சிறுபிள்ளைகளுக்கு தொற்று அதிகரிப்பு- மக்கள் அவதானம்!!

-M.கிரிசாந்-
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சடுதியாக அதிகரித்துவரும் கொவிட் தொற்று இன்றும் (25/01/2022) நான்கு நபர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி.எஸ்.அகிலன் குறிப்பிட்டார்.
அவர்கள் மேலும் குறிப்பிடுகையில் தற்போது நாளாந்தம் ஒரு சில கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் நிலை தொடர்கின்றது மேலும் இதற்கு முன்னர் எப்போதும் இல்லாதவாறு தற்போது அதிகளவான சிறுபிள்ளைகள் கொவிட்-19 தொற்றாளர்களாக இனம் காணப்படுவதனை காணக்கூடியதாக உள்ளதாகவும்.
இந்நிலையில் ஆலையடிவேம்பு பிரதேச பொதுமக்கள் நிலைமை உணர்ந்து பொறுப்புடன் வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிதல் போன்ற முக்கிய கொரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ளுமாறும் மக்களிடம் கோரிக்கை விடுகின்றார்.
கொவிட்-19 தொற்று நோயினை கட்டுப்படுத்த முக்கியமான வழிமுறை தடுப்பூசி செலுத்திக்கொள்வது என பல நாடுகள் செயல்பட்டு வருகின்ற நிலையில் எமது நாட்டு அரசாங்கமும் இலவசமாக மக்களுக்கு சிறந்த முறையில் தடுப்பூசிகளை செலுத்திவருகின்றது.
எனவே மக்கள் தற்போதைய நிலைமை உணர்ந்து இதுவரை தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாதவர்கள் தடுப்பூசியை முறையாக செலுத்திக்கொள்ளுதல் மிக முக்கியமானது எனவும் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி.எஸ்.அகிலன் அவர்கள் தெரிவித்துக்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.