ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) வேண்டிய முன் நகர்வுகள் இன்றைய நிலை…

-கிரிசாந் மகாதேவன்-
அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் நீண்ட நாள் தேவையாக வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM) ஒன்று காணப்படுகின்ற நிலையில்.
ஆலையடிவேம்பு பிரதேச தன்னார்வம் கொண்டவர்கள் மற்றும் இளைஞர்கள் என்பவர்களினால் வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) குறைந்தது ஒன்றையாவது நிலைநிறுத்த வேண்டும் என வங்கிகளை வலியுறுத்தும் வகையில் மேற்படி கோரிக்கை அடங்கிய ஆவணத்திற்கு 5000 பேரின் கையெழுத்து வேண்டிய கையெழுத்து வேட்டை ஒரு சில வாரமாக மேற்கொள்ளப்பட்டு நிறைவுக்கு வந்த நிலையில் அடுத்தகட்ட முன்னெடுப்புகளுக்கு பன்முக முனைப்புடன் அயராது செயற்பட்டு வருகின்றனர்.
மேலும் இது தொடர்பில் பல சமூகப் பற்றாளர்களும் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கு ATM இயந்திரத்தினை கொண்டு வருவதற்கு தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இது தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்ற முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் புஷ்பகுமார் (இனிய பாரதி) அவர்களின் முன்னெடுப்புக்கு கவனம் செலுத்தும் முகமாக பிரதமர் அலுவலகத்தினால் இலங்கை வங்கியின் தவிசாளர் அவர்களுக்கு விரைவில் ATM இயந்திரத்தினை ஆலையடிவேம்பு பிரதேத்திற்கு வழங்க வகைசெய்யுமாறு அறிவுறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.