ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) வேண்டிய பாரிய கையெழுத்து வேட்டை ஐந்தாம் நாள் நிலவரம்…

அக்கரைப்பற்று தமிழ் பிரிவு ஆலையடிவேம்பு பிரதேசம் அண்ணளவாக 26,941 மக்கள் தொகையை கொண்டு காணப்படுகின்ற போதிலும் ஆலையடிவேம்பு பிரதேச பகுதியில் வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் ஒன்று இல்லாமல் மக்கள் தொலைதூரங்களுக்கு சென்று குறித்த சேவையைப் பெற்றுக்கொள்ளும் அவல நிலையில் பெரிதும் சிரமங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வாழ்ந்து வருகின்ற நிலையில்.
பிரதேச மக்களின் நீண்ட நாள் தேவையாக காணப்படுகின்ற குறித்த வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) குறைந்தது ஒன்றையாவது நிலைநிறுத்த வேண்டும் என வங்கிகளை வலியுறுத்தும் வகையில் மேற்படி கோரிக்கை அடங்கிய ஆவணத்திற்கு 5000 பேரின் கையெழுத்து வேண்டி கையெழுத்து வேட்டை தன்னார்வம் கொண்டவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் ஐந்தாம் நாளாகிய இன்றைய தின முடிவில் 4000 கையெழுத்துக்களை அண்மித்த கையெழுத்துக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு இலக்கை நோக்கிய வெற்றிப்பாதையில் சென்று கொண்டு இருக்கின்றது.
இவ் தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் வேண்டிய கையெழுத்து வேட்டை கட்டம் கட்டமாக கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளுடன் பிரதேச சமூக அமைப்புக்கள் மற்றும் தன்னார்வம் கொண்டவர்களின் ஒத்துழைப்புடன் ஆரவாரம் இல்லாமல் இடம்பெற்று வருகின்றது.
மேலும் தன்னார்வம் கொண்ட சமுக அக்கறையாளர்களால் மேற்கொள்ளப்படும் வங்கி தானியங்கி பண பரிமாற்ற இயந்திரம் (ATM ) வேண்டிய கையெழுத்து வேட்டை செயற்றிட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் ATM இயந்திர வசதியினை எமது பிரதேசத்திற்கு பெற்றுத்தர கோரி வாங்கி நிறுவனங்களை இணையம் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களாகிய நாம் கோரிக்கையினை மேற்கொண்டு நம் பங்களிப்புகளையும் வழங்கலாம்.
Example:
https://www.peoplesbank.lk/ இணைப்பினை click செய்து இணையப் பக்கத்திற்கு செல்க.
படத்தில் காட்டியிருக்கும் கடித அடையாளத்தை அழுத்தி
உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரியை உள்ளிடவும்.
[ Dear Sir/ Madam
I’m #########
Myself and people who lives in towns like Alayadiwembu,vachikudah,theevukalai,navatkadu,kolavil, Kannakipuram, Sagamam, Aligambai & etc need to go to the Akkkaraipattu branch to fulfill our banking needs.
Because there is no ATM facility in our Alayadiwembu branch. those who come from far away have to travel an extra three kilometers and spent more money to the transportations to simply make ATM withdrawals on off hours of bank.
It will be much easier for us. if there was an accessible ATM at our Alayadiwembu branch in order to facilitate our banking transactions more effectively.
So kindly evaluate the situation and allocate an ATM to our Alayadiwembu branch as soon as possible.
Thank you.]
மூன்றாவது பெட்டியில் பின்வரும் ஆங்கிலத்தில் உள்ள கடிதத்தில் ######## என்று இடப்பட இடத்தில் உங்கள் பெயரை இட்டு copy paste செய்து send குடுக்கவும்.
அல்லது உங்களுக்கு வேண்டியவாறு உங்கள் மொழிநடையில் தமிழிலும் ATM இயந்திரம் கோரி தட்டச்சு செய்து அனுப்பலாம்.
இவ்வாறு உங்கள் தேவைக்கு ஏற்றால் போல் அனைத்து வாங்கி நிறுவனங்களிடமும் கோரிக்கையை இடலாம்.