ஆலையடிவேம்பு பிரதேசத்தின் அனைத்து பொதுமக்களுக்கும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் அறிவித்தல்!

சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஊடாக PCR/ ANTIGEN பரிசோதனை மேற்காள்ளப்பட்டு, பிரதேச செயலகத்தின் ஊடாக நடமாடும் சேவை மூலம் (08.06.2021) தொடக்கம் (15.06.2021) வரை பொருட்களை விற்பனை செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்ட விற்பனையாளர்களின் விபரம் இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பிரதேச மக்களை அறிவுறுத்த பதிவிடப்பட்டு இருந்தது.
அனுமதி வழங்கப்பட்ட வியாபாரிகளிடம் மாத்திரம் தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் முகமாக குறித்த பதிவு அமைந்து இருந்தது.
மேலும் அந்த பதிவில் குறிப்பிடப்படும் விற்பனையாளர்கள் தவிர்ந்த எவரும் எமது பிரதேச செயலக பிரிவினுள் பொருட்களை விற்பனை செய்ய முடியாது.
அவ்வாறு அனுமதி பெறாமல் யாராவது விற்பனையில் ஈடுபட்டால் அவர்களது விபரங்களை உடனடியாக பிரதேச செயலகத்தின் Hotline இலக்கமான 071 9114417 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்கவும். எனவும் குறித்த பதிவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
அனுமதி வழங்கப்பட்ட வியாபாரிகள் விபரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.