ஆலையடிவேம்பு

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கொவிட் தொற்று 02ஆவது மரணம் பதிவானது….

-கிரிசாந் மகாதேவன்-

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் இதுவரையில் கொவிட்- 19 மூன்றாம் அலையின் காரணமாக 11 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில். நேற்றைய தினம் (06) கொவிட்-19 காரணமாக மரணம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆலைலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் டா.எஸ் அகிலன் குறிப்பிட்டார்.

மரணமடைந்த குறித்த நபர் வைத்திய தேவைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியிருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் குறித்த நபர் நேற்று மரணமடைந்துள்ளார்.

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கொவிட்-19 தொற்று காரணமாக இது இரண்டாவது மரணம் என்பதுடன். முதலாவது மரணம் நாட்டில் ஏற்பட்ட கொவிட்-19 இரண்டாம் அலையின் போது ஏற்பட்டது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பொதுமக்கள் பொறுப்புடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடந்து கொள்ளுமாறு சுகாதாரத்துறையினர் வேண்டிக்கொள்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker