ஆன்மீகம்

சூரிய கிரகணம் நேரம், செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை, தோஷம் ஏற்படும் நட்சத்திரங்களின் முழு விபரம்

சூரிய கிரகணம் வரும் டிசம்பர் 26ஆம் தேதி ஏற்பட உள்ளது. கிரகணத்தின் போது என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது. எந்த ராசி, நட்சத்தினருக்கு தோஷம் ஏற்படும் போன்ற விபரங்களை விரிவாக பார்ப்போம்…


​சூரிய கிரகணம்

பொதுவாக கிரகணம் என்பதற்கு எடுத்தல், மறைத்தல் என்று பொருள். ஆண்டு தோறும் கிரகண நிகழ்வு நடக்கின்றது. இதில் யார் மறைக்கிறார், எடுக்கிறார் என்பதில் தான் இருக்கின்றது.

நம் கண்களுக்கு தெரியக்கூட கிரகங்கள் இரண்டு சூரியன் மற்றும் சந்திரன். கிரகணங்களில் சில நம் பகுதிக்கு தெரியும், சில நமக்கு தெரியாது. அப்படி நமக்கு தெரியாத கிரகணங்கள் பற்றி நாம் பயப்படத் தேவையில்லை.

​யார் எடுக்கிறார்:

ராகு – கேது ஆகிய இருவர் தான் சூரியனை மறைத்தல், விழுங்குவதாக ஐதீகம். ராகு – கேது இருவரும் சர்ப்ப கிரகம், நிழல் கிரகம் என கூறப்படுகிறது.

சூரியன் கிரகணம் நடக்கும் போது சூரியன் மறைக்கப்பட்டு கருமையாகக் காட்சி தருவார். அப்படி கிரகண காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்பவற்றை தெரிந்து கொள்வது அவசியம்.

சூரிய கிரகணமும் 6 கிரக சேர்க்கையும்: பாதிக்கப்பட உள்ள ராசிகள், எளிய பரிகாரம் இதோ

​என்ன செய்ய வேண்டும்

இறை வழிபாடு, இறைவனை நினைத்து ஜெபம் செய்வதால் பலன்கள் பல மடங்காக கிடைக்கும். இறைவனை நோக்கி ஒரு மந்திரம் சொன்னால், ஆயிரம் மடங்கு பலன் அதிகரிக்கும்.

கிரகண நேரத்தில் தீட்சை வாங்குவது, உபதேசம் வாங்குவது நல்லது. சிலர் சொன்னால் நடக்கும் என கூறுவார்கள் அல்லவா. அவர்கள் கிரகண காலத்தில் ஜெபம் செய்து தன் சக்தியை அதிகரித்து வைத்திருப்பார்கள். குருமார்களிடன் உபதேசம் வாங்குவது, வாக்கு வாங்குவது மிக நல்லது.

Also Read: சூரிய கிரகணம் எப்போது? – திருப்பதி, சபரிமலை ஐயப்பன் கோயில் அடைக்கப்படும் விபரம் இதோ…

பலன் கோடி மடங்கு உயரும்

நீர் நிலைகளுக்கு சென்று அது குளம், ஆறு என எதுவாக இருக்கலாம், அதில் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு நமக்கு என்ன மந்திரம் தெரியுமோ, அதை முடிந்த அளவு பல முறை சொல்லுங்கள். அதனால் கிடைக்கக் கூடிய பலன் பல கோடி மடங்கு உயரும். இரவு நேரங்களில் கிரகணமோ அல்லது நீர் நிலை அருகில் இல்லாதவர்கள் உங்கள் வீட்டிலேயே பூஜை அறையில் அமர்ந்து இறைவனை ஜெபித்தல் நல்லது.

மூன்று ஜென்மங்களில் ஆயுள் முழுவதும் செய்தால் கிடைத்த பலன், கிரகண நேரத்தில் செய்வதால் கிடைக்கும்.

சூரிய கிரகணம் நேரம்

விகாரி ஆண்டு மார்கழி மாதம் 10ஆம் நாள், (டிசம்பர் 26) வியாழக்கிழமை, அமாவாசை திதியில், மூல நட்சத்திரத்தில் ஏற்படுகிறது.

இந்திய நேரப்படி காலை 07:05 மணி முதல் மதியம் 01.35 மணி வரை சூரிய கிரகணம் நீடிக்கிறது.

பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரம்

கேட்டை, மூலம், பூராடம், அசுவதி, மகம் ஆகிய நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் பரிகாரம் செய்துகொள்வது நல்லது.

Also Read: வார ராசி பலன் 2019 டிசம்பர் 23 முதல் 30ம் தேதி வரை

​சொல்ல வேண்டிய மந்திரம்

சொல்ல வேண்டிய மந்திரம்

யோசெள வஜ்ரதரோ தேவ ஆதித்யானாம் ப்ரபுர்மதா:|

ஸஹஸ்ர சந்த்ர நயன க்ரஹ பீடாம் வ்யபோஹத்||

எளிய மந்திரங்கள் :

ஓம் சிவாய நமஹ

ஓம் கணபதியே நமஹா

ஓம் சரவண பவ

என நமக்கு தெரிந்த மந்திரங்கள் தெரியுமோ, உங்களுக்கு எந்த சுவாமி பிடிக்குமோ அவருக்குரிய மந்திரங்களை சொல்லலாம். அதை தொடர்ந்து சொல்லி வருவது நல்லது. இவற்றை ஜெபித்து வர பல கோடி மடங்கு பலன் கிடைக்கும். அதோடு இதனால் உங்களுக்கு இருக்கக் கூடிய தோஷங்கள் நீங்கும்.

யோகம், தியானம் செய்தால் நன்மை உண்டாகும்.

ஓம் என்ற மந்திரம் பற்றி இதுவரை நீங்கள் அறிந்திராத அற்புதங்கள்… படிங்க…

 

செய்யக் கூடாதவை:

கிரகண நேரங்களில் உணவு அருந்தக் கூடாது. நீர், காபி, டீ எடுத்துக் கொள்ளுதல் கூடாது. ஏன் என்றால் சர்ப்ப கிரகங்களான ராகு – கேதுவின் விஷங்கள் ஒளிக்கதிர் மூலமாக வருவதாக ஐதீகம்.

அறிவியல் ரீதியாக ஒளிக்கற்றையில் கதிர் வீச்சுக்கள் இருக்கும் என்பதால் அது நல்ல பொருட்கள் மீது பட அசுத்தம் ஏற்பட்டுவிடும் என்பார்கள் அதனால் தான் கோயில்களை கூட அந்த நேரத்தில் பூட்டி விடுவார்கள். கிரகணம் முடிந்த பின்னர் சுத்தம் செய்து பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்படுவார்கள்.

கிரகணங்கள் மூலமாக சில நட்சத்திரங்களுக்குத் தோஷம் உண்டாகலாம்

தோஷ நிவர்த்தி பொருள்:

தர்ப்பை புல்லுக்கு எதையும் உட்கிரகித்துக் கொள்ளும் தன்மை உண்டு. அதனால் கிரகண நேரத்தில் நீங்கள் பயன்படுத்தக் கூடிய பொருட்கள், உணவு பொருட்களின் மீது தர்ப்பை போட்டு வைப்பது நல்லது.

தர்ப்பை இருக்கும் காட்டிற்கு பாம்பு செல்லாது. தர்ப்பைக்கு விஷயத்தை முறியடிக்கக் கூடிய தன்மை உண்டு. இதனால் தண்ணீர் தொட்டிக்குள் தர்ப்பை புல் போட்டு வைக்க வேண்டும்.

கிரகண நேரத்தில் கண்டிப்பாக தூங்கக் கூடாது. அப்படி செய்தால் தூங்குவது தான் வாழ்க்கையில் அதிகம் நீடிக்கும்.

சுவாமி வழிபாடு

கிரகணம் முடிந்த பின்னர் தலைக்கு குளிக்க வேண்டும். அதன் பின்னர் சுவாமி வழிபாடு செய்ய வேண்டும்.

கர்ப்பிணிகளுக்கு கிரகண தோஷம் அதிகம்

கிரகண தோஷங்கள் கர்ப்பிணி பெண்களை அதிகம் பாதிக்கும். பக்‌ஷி தோஷம், சர்ப்ப தோஷம் எளிதில் உட்கிரகிக்கும். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் இந்த கிரகண காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வரக் கூடாது. படியில் அமரக் கூடாது. இதனால் குழந்தைக்கு பாதிப்புகள் ஏற்படலாம்.

அவர்களும் கிரகண நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker