ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த மகாலிங்கம் அருள்நாயகமூர்த்தி அவர்கள் பிரதம பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு….

ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த தற்போது கந்தளாய் பிரதேசத்திற்குட்பட்ட சேருநுவர பொலிஸ் நிலையத்தில் பணி புரிகின்ற பொலிஸ் பரிசோதகர் மகாலிங்கம் அருள்நாயகமூர்த்தி அவர்கள் நேற்றய தினம் (11) பொலிஸ் திணைக்களத்தால் பிரதம பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்று எமது சமூகத்திற்கு பெருமையினைச் சேர்த்துள்ளார்.
மகாலிங்கம் அருள்நாயகமூர்த்தி அவர்கள் தம்பிலுவிலை பிறப்பிடமாகவும் அக்கரைப்பற்று 08, ஆலையடிவேம்பு பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் 1988.05.02 ஆந் தினம் இலங்கை பொலிஸ் சேவையில் உதவி பொலிஸ் பரிசோகராக இணைந்து கொண்டார். பின்னர் பல்வேறு பிரதேசங்களிலும் கடமையாற்றி 10 வருடங்களுக்கு முன்னர் பொலிஸ் பரிசோதகராக பதவியுயர்த்தப்பட்ட நிலையில் இன்று பிரதம பொலிஸ் பரிசோதகராக பதவியுயர்த்தப்பட்டுள்ளார்.
தனது 32 வருட சேவைக்காலத்தில் அவர் வகித்த, வகிக்கும் பிரிவில் கூடிய அனுபவம் வாய்ந்தவராக காணப்படுவதோடு சட்டத்தினையும் கடமையினையும் மிக நேர்த்தியாக செய்து தனது அதிகாரத்திட்குட்பட்ட வகையில் அனைத்து இன மக்களுக்கும் நீதியான முறையில் சேவையாற்றக் கூடிய இவர் பதவி உயர்வு பெறுவதையிட்டு சிவில் சமூகம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு இவரது தன்னலமற்ற சேவை முழு நாட்டிற்கும் சென்றடைய மனதார வாழ்த்துகின்றோம்.