ஆலையடிவேம்பு
பனங்காடு பிரதேசத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அபிநயா மருத்துவ பீடத்திற்கு தெரிவானார்.

வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பனங்காடு பிரதேசத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அபிநயா மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டு மண்ணிற்கும் பெற்றோருக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்தார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் பனங்காட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் மற்றும் புஸ்பாதேவி ஆகியோரின் புதல்வியான இவர் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண மிசன் மகாவித்தியாலயத்தில் கல்வியை பயின்று 2019 ஆம் கல்வியாண்டில் உயர்தர விஞ்ஞானத்துறையில் தோற்றி 3 பி சித்தியினை பெற்றுக்கொண்டார்.
இதனடிப்படையில் மாவட்ட மட்டத்தில் 19 ஆவது இடத்தினை பெற்றுக்கொண்ட அவர் 1.786 எனும் வெட்டுப்புள்ளியினையும் பெற்றுக்கொண்டதுடன் வெளியான பல்கலைக்கழக அனுமதியின் பிரகாரம் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகினார்.
மருத்துவதுறைக்கு தெரிவு செய்யப்பட்ட அபிநயாவிற்கு கல்விச்சமூகம் உள்ளிட்ட அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.