ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி காரணமாக வீதிகளில் தேங்கிய வெள்ள நீர்: ஆலையடிவேம்பு பிரதேச சபையினரினால் வெள்ள நீரானது அகற்றும் செயற்பாடு முன்னெடுப்பு….

-கிரிசாந்-
வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பலத்த மழை பெய்யும் சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறி இருந்த நிலையில்.
இன்றைய (25) தினம் நாட்டின் பல பாகங்களிலும் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.
அந்த வகையில் இன்றைய தினம் (25) ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அதிக மழைவீழ்ச்சி காரணமாக வெள்ள நீரானது வீதிகளிலும் வடிகான்களிலும் தேங்கியமையால் மக்களுக்கு பெரும் அசௌகரியமான நிலை ஏற்பட்டது.
இதனை நிவர்த்தி செய்யுமுகமாக ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் த.கிறோஜாதரன் அவர்களின் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் ஊழியர்களின் உதவியுடன் பல வடிகான்கள் துப்பரவு செய்யப்பட்டு வெள்ள நீரானது அகற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இச்சேவையினை திறன்பட செயற்படுத்திய ஆலையடிவேம்பு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதேச சபையின் ஊழியர்களுக்கு பிரதேச மக்கள் தங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றார்கள்.