ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு கோட்டத்தின் தமிழ் மொழித்தின இறுதி நிகழ்வுகள் நாளை (24) அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில்….

ஆலையடிவேம்பு கோட்டத்தின் தமிழ் மொழித்தின இறுதி நிகழ்வுகள் நாளைய தினம் (24) காலை 7.45 மணிக்கு அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப்பணிப்பாளர் க.கமலமோகனதாசன் தலைமையில் இடம்பெற இருக்கிறது.
வரவேற்பு நடனம் மற்றும் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்களின் பேண்ட் வாத்திய இசைக்குழுவின் வரவேற்புடன் ஆலையடிவேம்பு கோட்டத்தை சேர்ந்த 16 பாடசாலைகளின் அதிபர்களும் வரவேற்கப்பட்டு நிகழ்வுகள் இடம்பெறுவதுடன்.
ஆலையடிவேம்பு கோட்ட மட்ட தமிழ் மொழித்தின முதலாம் கட்ட எழுத்தாக்க போட்டிகளியில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் நாளைய தினம் இடம்பெறும் போட்டிகளுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.