ஆலையடிவேம்பு கல்விக் கோட்ட ஆரம்ப பிரிவு கல்வி நடவடிக்கையில் முன்னணி பாடசாலை: அக்கரைப்பற்று, விவேகானந்தா வித்தியாலயம்….

ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்தில் அக்கரைப்பற்று, விவேகானந்தா வித்தியாலயம் ஆரம்ப பிரிவு கல்வி நடவடிக்கையில் முன்னணி பாடசாலையாக தொடர்ந்தும் இருந்து வருகிறது.
இவ் வருடம் வெளிவந்த புலமை பரிசில் பரீட்சை முடிவுகளில் அடிப்படையிலும் முன்னிலையில் காணப்படுகிறது.
திருக்கோவில் கல்வி வலயத்தில் 02 ஆம் இடத்தினையும் ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்தில் 01 ஆம் இடத்தினையும் பெற்றுள்ளது.
மேலும் ஆலையடிவேம்பு கல்விக் கோட்டத்தில் வெளிவந்த புலமை பரிசில் பரீட்சை முடிவுகளில் 166 அதிகூடிய புள்ளியை பெற்ற மாணவி கல்வி கற்ற பாடசாலையாகவும் குறித்த பாடசாலை காணப்படுகிறது.
இவ்வாறு இருந்தும் பாடசாலையின் பௌதிக சூழல் வசதிகள் அற்ற பாடசாலையாக இருந்து வருவதாகவும் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமமான நிலை காணப்படுவதாகவும் பாடசாலையின் அதிபர் வருத்தம் தெரிவிக்கின்றார்.
பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் பிரதேச சமூகத்தினர் பாடசாலையின் வளர்ச்சியில் அக்கறை கொள்ள முன்வரவேண்டும் எனவும் பாடசாலையின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் வளர்ச்சி கருதி விரைவில் பழைய மாணவர் அமைப்பு ஒன்று உருவாக்கப்பட உள்ளதாகவும் அதற்கான ஒத்துழைப்பை அனைத்து பழைய மாணவர்களும் சமூகத்தினரும் பெற்றோர்களும் வழங்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைக்கிறார்.