ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட அதிபர்கள் கோட்டக்கல்வி அதிகாரிகளுக்கான சேவை நலன் பாராட்டு விழா…

ஆலையடிவேம்பு கோட்ட பாடசாலையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபர், இடமாற்றம் பெற்றுச் செல்லும் அதிபர்கள் மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர் ஆகியோரினை வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் (17) அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் ஆலையடிவேம்பு கோட்ட அதிபர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர்.உதயகுமார் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் ஆலையடிவேம்பு கோட்ட பாடசாலையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபர் திருமதி. ரவிலேகா நித்தியானந்தம், இடமாற்றம் பெற்றுச் செல்லும் அதிபர்கள் மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர் ஆகியோரினை வாழ்த்தி அவர்களுக்கு பொண்ணாடை போர்த்தி வாழ்த்துப்பா என்பன வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டதுடன் புதிதாக கடமையேற்ற ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப் பணிப்பாளர் சோ. செல்வம் அவர்களையும் கெளரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர், கோட்டத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பிரதி அதிபர்கள் கலந்து சிறப்பித்தனர்.



