ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட புனித சவேரியார் வித்தியாலயத்தின் க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளில் பாரிய முன்னேற்றம்….

தற்போது வெளியிடப்பட்ட 2022(2023) க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளின் ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட கமு/திகோ/புனித சவேரியார் வித்தியாலய மாணவர்கள் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றகரமான அடைவு மட்டத்தை பெற்றிருக்கின்றார்கள்.
கமு/திகோ/புனித சவேரியார் வித்தியாலயம் ஆலையடிவேம்பு கல்விக்கோட்டத்தில் காணப்படுகின்ற பின்தங்கிய பாடசாலையாக இருந்து வருவதுடன். அண்மைக்காலமாக வினைத்திறனான பாடசாலையாக கட்டம் கட்டமாக வளர்ந்து வருகின்ற பாடசாலையாகவும் காணப்படுகிறது.
அந்த வகையில் தற்போது வெளியாகிய 2022(2023) க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகளில் 13 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி அதில் 07 மாணவர்கள் க.பொ.த.(உ/த) கற்க தகுதிபெற்றுள்ளனர். அதாவது தோற்றிய மாணவர்களில் 54% மாணவர்கள் க.பொ.த (சா/த) பரீட்சை முடிவில் சித்தி பெற்றுள்ளனர்.
சிறந்த பெறுபேறு 4A 2B 2C S ஆக காணப்படுகிறது.
குறித்த அடைவு மட்டமானது க.பொ.த (சா/த) பரீட்சை முடிவில் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் சிறந்த பெறுபேறாக பார்க்கப்படுகிறது.
2022 ஆம் வருடம் 6% மாணவர்கள் சித்தியும்
2021 ஆம் வருடம் 30% மாணவர்கள் சித்தியும்
2020 ஆம் வருடம் 38% மாணவர்கள் சித்தியும்
2019 ஆம் வருடம் 32% மாணவர்கள் சித்தியும் என காணப்பட்டு வந்த நிலையில் இந்த முறை முன்னேற்ற கரமான பரீட்சை முடிவாக காணப்படுவது அனைவரினதும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
அது மாத்திரம் இல்லாமல் பாடங்கள் ரீதியாக பார்க்கும் போதும் கடந்த காலங்களை விட சிறந்த அடைவு மட்டத்தை பெற்றிருக்கின்றார்.
குறிப்பாக ஆங்கில படத்தின் சித்திவீதம் தொடர்ச்சியாக 0% மாக இருந்து வந்த நிலையில் இவ்முறை 39% உயர்வடைந்து காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன் கற்பித்து வழிப்படுத்திய அனைத்து ஆசிரியர்களுக்கும் மற்றும் பாடசாலையின் அதிபர் திருமதி.தமிழ்செல்வி அவர்களுக்கும் பிரதேச மக்கள் சார்பாக நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.