சமுர்த்தி கட்டாய சேமிப்பு கணக்குள்ளவர்களுக்கான சஹனபியவர எனும் சலுகைக்கடன் திட்டம் உடன் அமுலுக்கு வரும் வகையில்

வி.சுகிர்தகுமார்
ஜனாதிபதி கோத்தபயவின் ஆலோசனைக்கமைய கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டு தொழிலை இழந்துள்ள சமுர்த்தி கட்டாயசேமிப்பு சேமிப்பு கணக்குள்ளவர்களுக்கான சஹனபியவர எனும் சலுகைக்கடன் திட்டம் உடன் அமுலுக்கு வரும் வகையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் சுற்றுநிருபத்திற்கமைய சமுர்த்தி வங்கிகளினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினூடாக ஆகக்கூடியது 10000 ரூபா வழங்கப்படுவதுடன் கூடியது 5000 ரூபா வீதம் இரு சந்தர்ப்பங்களில் சமுர்த்தி வங்கிகளில் இருந்து விடுவிக்க முடியும்.
இச்சலுகைக்கடனின் சலுகைக் காலம் 06 மாதங்கள் என்பதுடன் 12 மாதங்களுக்குள் தவணை அடிப்படையில் வட்டியின்றி அறிவிடப்பட வேண்டும் .
மேலும் இக்கடனுக்கு பிணை இல்லை என்பதுடன் குறித்த பயனாளியின் கட்டாய சேமிப்பு கணக்கில் உள்ள சேமிப்பு தொகையில் 80 வீதம் மாத்திரம் வழங்கப்படும்.
இதனை வழங்கும்போது காப்பீடுகள் எதுவும் அறவிடப்படமாட்டாது என்பதுடன் கட்டுப்பாட்டுச்சபையின் காப்பங்கீகாரத்தில் வழங்க முடியும்.
இதற்கான விண்ணப்பங்களை சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் விண்ணப்பபடிவங்களை ஒப்படைப்பதற்கோ அல்லது பணத்தை பெறுவதற்கோ பயனாளி வங்கிக்கு செல்ல தேவையில்லை.
மாறாக விண்ணப்பங்களை சமுர்த்தி உத்தியோகத்தர் வங்கியில் ஒப்படைத்து வங்கி பதிவேடு ஒன்றில் கையொப்பமிட்டு பணத்தை பெற்று பிரிவில் உள்ள பயனாளியிடம் ஒப்படைப்பதுடன் பெற்றுக்கொண்டதற்கான கடிதம் ஒன்றினையும் அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்காக பெறப்படும் ஆவணத்தை 03 நாட்களுக்குள் வங்கியில் உத்தியோகத்தர் ஒப்படைக்க வேண்டும்.
என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேநேரம் சமுர்த்தி அருணலு மீள்நிதியீட்ட மேலதிகப்பற்றுக்கடன் எனும் கட்டாய சேமிப்பு இல்லாதவர்களுக்கும் புதிய முத்திரை உள்ளவர்களுக்குமான மற்றுமொரு விசேட கடன் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சமுர்த்தி வங்கியினால் 3 இலட்சம் ரூபா வரையில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பிற்கு நிதி வழங்கப்படும். ஆயினும் முதற்கட்டமாக 50000 ரூபா வழங்கப்படுவதுடன் இத்தொகையில் சிறப்பாக சேமிப்பினை மேற்கொண்டு பயனாளிகளுக்கு சமுதாய அடிப்படை அமைப்பால் கடன் விடுவிக்கப்படும். நிலையினை பொறுத்து ; கடனை பெற முடியம்.
இதற்காக 10 வீதம் வருடாந்த வட்டி அறவிடப்படுவதுடன் ஏனைய கடன்களுக்கான நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படும்.