இலங்கை
கிழக்கு மாகாண ஆளுநரால் மட்டக்களப்பு தனியார் பேருந்து நிலைய தொலைதூர பயணிகள் முன்பதிவு நிலையம் திறந்து வைப்பு.

ஜே.கே.யதுர்ஷன்
மட்டக்களப்பில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து நிலையத்தில் உள்ள தொலைதூர பயணிகள் முன்பதிவு நிலையம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு நேற்றய தினம் (04) மட்டக்களப்பு மாநகர மேயர் திரு.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.
மேலும் நேற்றய தினம் மட்டக்களப்பு மாநகரின் அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடல் மட்டக்களப்பு மாநகர மேயர் அவர்களினால் இடம்பெற்றது.
இவ் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாநகரின் அடையாளங்களில் ஒன்றான வெளிச்சவீட்டினை புனரமைத்து, அழகுபடுத்தும் வேலைத்திட்டம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.